It gives me honor .. Pooja Hegde flexibility
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரான்சில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 17ம் தேதி தொடங்கியது. வருகிற 28ந்தேதி வரை 12 நாட்கள் விழா கோலாகலமுடன் நடைபெற உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்பட வேண்டும் என்பதும் சர்வதேச திரை கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது.
இதில், முதன்முறையாக கவுரவத்திற்கான நாடாக அதிகாரப்பூர்வ முறையில் இந்தியாவின் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியா சார்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ளது.
அதன் தொடக்க விழாவில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி, மூத்த இயக்குனர் சேகர் கபூர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நடிகர்கள் மாதவன், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோன்று, இந்த விழாவில் தென்னிந்திய நடிகைகளான தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் இந்திய குழுவினரின் ஒரு பகுதியாக கலந்து கொண்டனர். அதன்படி நடிகர் மாதவன் தயாரிப்பில் உருவான ராக்கெட்ரி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தமிழில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டது பற்றி அவர் கூறும்போது, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏதேனும் ஒன்றை பிரபலப்படுத்துவதற்காக நான் வரவில்லை. ஆனால், இந்தியாவை அடையாளப்படுத்தும் பிரதிநிதியாக வந்துள்ளேன்.
இந்திய திரைப்படங்களை கொண்டாடும் ஓர் இந்திய நடிகையாக நான் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருப்பது உண்மையில் எனக்கு கவுரவம் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…