பிரபல இசையமைப்பாளர் பாரீஸ் சந்திரன் மரணம்

கேரள திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பாரீஸ் சந்திரன் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 1956-ல் எளிமையான இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே இசை பயின்று மலையாள நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். பிறகு திரைப்படத்துறையில் நுழைந்து தனது திறமையால் பிரலமான இசையமைப்பாளராக மாறினார்.

‘நான் ஸ்டீவ் லோபஸ்’, ‘திருஷ்டானம்’, ‘சாயில்யம்’, ‘பம்பாய் மிட்டாய்’, ‘நகரம்’, ‘பயாஸ்கோப்’, ‘ஈடா’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் இயற்றியுள்ளார். 2008ஆம் ஆண்டில், ‘பயாஸ்கோப்’ படத்திற்காக பாரிஸ் சந்திரன் சிறந்த பின்னணி இசைக்கான கேரள மாநில விருதைப் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 இல், ‘பிரணயத்தில் ஒருவாள்’ என்ற டெலிபிலிம் மூலம் கேரள அரசின் தொலைக்காட்சி விருதைப் பெற்றார். பாரிஸ் சந்திரனுக்கு ஷைலஜா என்ற மனைவியும், ஆனந்த் மற்றும் ஆயுஷ் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

Suresh

Recent Posts

Love-U Love-U Kaatteri Video Song

Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…

7 hours ago

சமந்தாவின் வெற்றியை வாழ்த்திய நயன்தாரா

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

13 hours ago

தனுஷ் – ஸ்ரீலீலா கூட்டணியின் ‘ஓம்’ படத்தில் பிரம்மாண்ட நடனப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…

13 hours ago

‘அம்மா’ அமைப்பில் பரபரப்பு: தலைவர் ஸ்வேதா மேனன் உள்ளிட்ட நிர்வாகக் குழு முழுமையாக ராஜினாமா!

மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…

13 hours ago

‘சர்தார் 2’, ‘மார்ஷல்’ ஷூட்டிங் நிறைவு: கார்த்தியின் அடுத்தடுத்த மெகா திட்டங்கள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…

13 hours ago

செப்டம்பர் 11-ல் திரைக்கு வரும் ‘டிமான்டி காலனி 3’!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…

13 hours ago