Information about the music composer of Leader 173 has been released!
தலைவர் 173 இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத் இசையமைத்து கலக்கி கொண்டிருக்கிறார். ரஜினியின் உறவுக்காரர் அனிருத் என்பது தெரிந்ததே. இதனால் ‘தலைவர் 173’ படத்துக்கும் அவரே இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ரஜினியின் ‘தலைவர்-173’ சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதனின் டியூட்டிற்கு இசையமைத்த சாய், சூர்யாவின் ‘கருப்பு’ படத்துக்கும் இசையமைத்து இருக்கிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வருகிறார் சாய் அபயங்கர். அவ்வகையில் தற்போது ‘தலைவர் 173’ படத்துக்கும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரான கமல், சாய் அபயங்கரை பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக சுந்தர்.சி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘தலைவர் 173’ உருவாவதாக இருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தால், இந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ், நித்திலன் ஸ்வாமிநாதன் உள்பட பலரும் ரஜினி படத்தை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ பட இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தினை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தனது 2-வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதால், கதை மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் தொடர்பான அறிவிப்பு ரஜினியின் பிறந்த நாளான வருகிற 12-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…