சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ அடுத்த மாதம் 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்பாக 14-ந்தேதி சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ வருகிறது. இந்நிலையில், மறு வாரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

‘கருப்பு’ படம் ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு விதமான ரோல்களில் சூர்யா நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் நட்டி நடராஜ், யோகிபாபு, ஸ்வாசிகா மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்தை இயக்கியதுடன் வில்லன் அவதாரம் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து, வெங்கி அட்லுரியுடன் கூட்டணி அமைத்தார் சூர்யா. வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களின் மூலமாக வரவேற்பு பெற்ற வெங்கி அட்லுரி இயக்கத்தில், பேமிலி டிராமாவாக ‘சூர்யா 46’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்தாண்டு ஜுன் மாதம் ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.

 

When will Suriya’s ‘Karuppu’ release?.. Information released
dinesh kumar

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

18 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

18 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

18 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

19 hours ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

21 hours ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

22 hours ago