Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோபோ ஷங்கர் குறித்து எமோஷனலாக பதிவை வெளியிட்ட இந்திரஜா.!!

Indraja posted an emotional post about Robo Shankar.!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின் நடித்து வந்த இவர் திடீரென இரண்டு நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலருக்குமே இந்த தகவல் அதிர்ச்சியாக தான் இருக்கிறது இந்த நிலையில் மகள் இந்திரஜா அவரது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனலான பதிவை வெளியிட்டு உள்ளார்..

அதில் எங்களை நிறைய சிரிக்க வச்சதும் நீதான் இப்போ நிறைய அழ வைக்கிறதும் நீதான் இந்த மூன்று நாள் எனக்கு உலகமே தெரியல நீ இல்லாம நம்ம எப்படி நாங்க இந்த நாங்க ஃபேமிலியை எப்படி கொண்டு போக போறோம்னு தெரியல பட் நீ எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரி கண்டிப்பா நான் ஸ்ட்ராங்கா இருப்பேன் பா தம்பியின் இந்த மூணு நாளா உன்ன ரொம்ப தேடுறான்பா.

நீ சொல்லிக் கொடுத்த மாதிரி விமர்சனங்களுக்கு பயப்படாம இருப்பேன் கண்டிப்பா உன்னோட பொண்ணா உன் பெயரை காப்பாற்றுவேன் உங்களை பிரவுடா பீல் பண்ண வைப்பேன் லவ் யூ மிஸ் யூ அப்பா என்று எமோஷனலாக பேசியுள்ளார்.

இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்திராஜாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.