I would never say such a thing - Ilayaraja about the award
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.
அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம் வெளியேற்றியது. இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா புகார் செய்தார்.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள அனுமதி கோரினார். இதற்கு அனுமதி அளித்து, இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகள், அவர் வாங்கிய விருதுகள், இசைக்குறிப்புகள் உள்ளிட்ட 160 பொருட்கள், 7 பீரோக்கள் அனைத்தும் 2 லாரிகளில் எடுத்து செல்லப்பட்டன.
இந்நிலையில் இசையமைப்பாளர் தீனா பத்திரிகையாளர் சந்திப்பில், 50 ஆண்டு காலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கவுரவத்தைப் பெற்றுத் தந்த இளையராஜா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய விருதைச் சங்கத்தின் மூலமாகத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அந்த அளவுக்கு மனமுடைந்துள்ளார்” என்று கூறினார்.
இதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் சொல்லாத கருத்தை சொன்னதாக செய்திகள் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறு. விருதுகள் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்ற கருத்தை நான் வெளியிடவே இல்லை என்று கூறியிருக்கிறார்.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India