Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்தமாதிரியான கதையில் நடிக்க ஆசைப்படுறேன் : ரஜினி ஆர்வம்

I would love to act in a story like this: Rajinikanth's interest

இந்தமாதிரியான கதையில் நடிக்க ஆசைப்படுறேன் : ரஜினி ஆர்வம்

பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் இளம் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர்.

‘தலைவர்-173’ படத்திற்காக ரஜினி பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரிடமும் ஒரு கேள்வியை கேட்டிருக்கின்றார். அதாவது பிரபல ஹிந்தி படம் பெயரை சொல்லி இதுபோல ஒரு படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியை ரஜினி தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குநர்களிடம் கேட்டதாக ஒரு தகவல் உண்டு.

அமிதாப்பச்சன் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான cheeni kum என்ற திரைப்படம் அது. பீல் குட் காமெடி படமான cheeni kum படம் ரஜினிக்கு மிகவும் பிடித்த படமாகும். இதுபோல ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ரஜினி சமீபகாலமாக ஆசைப்பட்டு வருகிறார்.

ஆனால், ரஜினிக்கு இருக்கும் மாஸை வைத்து பார்க்கையில் இதுபோல ஒரு படத்தில் நடித்தால் அவருடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா ? என்ற கேள்வியும் எழுகின்றது. கண்டிப்பாக ரஜினி இதுபோன்ற படத்தில் நடித்தால் பொதுவான ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் அவரிடமிருந்து மாஸ், ஆக்சன், பன்ச் வசனங்கள் போன்ற விஷயங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு இதுபோன்ற படம் திருப்தியை கொடுக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், மிக விரைவில் cheeni kum போல ஒரு படத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தலைவர் 173 படத்திற்காக ராம்குமார் பாலகிருஷ்ணன், நித்திலன் என பல இயக்குனர்களின் பெயர்கள் பரிந்துரையில் இருந்துள்ளது. ஆனால் கடைசியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிபி சக்கரவர்த்திக்கு இந்த மாபெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே 2022-ம் ஆண்டே சிபி சக்கரவர்த்தி ரஜினிக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார். ரஜினிக்கும் அக்கதை பிடித்திருந்தாலும் ஒரு சில காரணங்களால் இவர்களின் கூட்டணி இணையாமல் போனது. இருந்தாலும் விடாமுயற்சியாக ரஜினிக்கு ஒரு கதையை உருவாக்கி தற்போது இழந்த வாய்ப்பை மீண்டும் பெற்றிருக்கின்றார் சிபி சக்கரவர்த்தி.

I would love to act in a story like this: Rajinikanth's interest
I would love to act in a story like this: Rajinikanth’s interest