I will criticize my performance myself harshly - says Surya
நடிகர் சூர்யா தனது சினிமா வாழ்க்கை குறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு: “நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது. சில நேரம் எனது படங்களை பார்ப்பது இல்லை. திரைக்கு வந்த பிறகு 100 நாட்கள் காத்திருந்து பார்த்த படங்களும் உண்டு.
நான் நடித்த சில குறிப்பிட்ட காட்சிகளை பார்க்காமல் தவிர்த்தும் இருக்கிறேன். ஆனாலும் படத்தில் நான் செய்துள்ள தவறை மக்கள் பொறுத்து மன்னித்து ரசிப்பார்கள் என்று நினைப்பது உண்டு. எனது மனைவி நடிகையாக இருக்கிறார். சகோதரரும் நடிக்கிறார். அவர்களுக்கு தன்னம்பிக்கை உண்டு. அவர்கள் நடித்த காட்சியை விரும்புவார்கள்.
ஆனால் நான் அப்படி இல்லை எனது நடிப்பை கடுமையாக விமர்சனம் செய்வேன். சரியாக நடிக்கவில்லை. இன்னும் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்று கூறிக்கொள்வேன். சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலான பிறகும் இன்னும் நான் சிறப்பாக நடித்து இருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.” இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.
I Want Everything Lyric Video | Blast | Arjun | Ravi Basrur | Subash K…
Aathi Raasathi Video Song | Suriya's Karuppu | RJ Balaji | Sai Abhyankkar| Dream Warrior…
Fraud Payale Video Song | Con City | Arjun Das| Anna Ben | Yogi Babu|…
Parimala and Co Trailer | Jayaram | Urvasi | Pandiraaj | Sandy | Sanjana |…
கராத்தே மாஸ்டராக இருக்கும் அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை சிறு வயதிலிருந்தே தைரியமான பெண்ணாக வளர்க்கிறார். “ஒரு பெண்…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கிரைம் த்ரில்லர் திரைப்படமான “கர”, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே…