I am not the hero of the film, but the director: Actor Jeeva proud
படத்தின் ஹீரோ நானல்ல, இயக்குநர்: நடிகர் ஜீவா பெருமிதம்
‘தலைவர் தம்பி தலைமையில்’ பட வெற்றி விழா நிகழ்வுகள் பற்றிக் காண்போம்..
கதையின் நாயகனாக ஜீவா நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் ஜனவரி 15-ந்தேதி வெளியானது. இதில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா, ஜெய்வந்த், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். நிதேஷ் சகாதேவ் இயக்கிய இப்படத்தை கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரித்துள்ளார். தீபக் ரவி இணை தயாரிப்பு செய்துள்ள இப்படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஜீவா பேசும்போது,
‘நாங்கள் கடந்த 4, 5 மாதங்களாகக் குமுளியில் ஒரு குடும்பமாகத் தங்கி இப்படத்தை எடுத்தோம். அங்கிருந்த மக்கள் கிடா வெட்டிச் சாமி கும்பிட்டு, இந்தப் படம் வெற்றி அடையும் என்று வாழ்த்தினார்கள். படப்பிடிப்பு முடிந்து கிளம்பும்போது, கண்கலங்கி வழியனுப்பி வைத்தார்கள். இதன் வெற்றிக்கு அவர்களின் அன்பும் முக்கிய காரணம்.
இயக்குநர் நிதேஷ் சகாதேவ்தான் இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ. ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் நடிப்பை வெளிக்கொண்டு வந்து, காட்சிகளை அவ்வப்போது மெருகேற்றினார். ஒரு நடிகராக எனக்குத் தமிழில் ஒரு பெரிய வெற்றியை இப்படம் மூலம் கொடுத்திருக்கிறார். நடிகர் வி.டி.வி.கணேஷ்தான் இந்தக் கதையை சிபாரிசு செய்தார். தயாரிப்பாளர் கண்ணன் ரவியைச் சந்தித்தோம். அப்போதே அட்வான்ஸ் கொடுத்தார். அந்த நம்பிக்கை தான் இன்று வெற்றியாக மாறியிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில் தனது மகனை மேடையில் அறிமுகப்படுத்தினார் ஜீவா. அவருடைய புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. அவ்வகையில், சௌத்ரி சார் பேரன் இளம் நாயகனாக அறிமுகமாக உள்ளார் என கணிக்கப்படுகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…