Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘பராசக்தி’ ட்ரெய்லர் எப்படி? – ‘கூஸ்பம்ப்ஸ்’ வசனங்கள், அனல் பறக்கும் ஆக்‌ஷன்! ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்

How is the trailer of 'Parasakthi'? - 'Goosebumps' dialogues, fiery action! G.V. Prakash Updates

‘பராசக்தி’ ட்ரெய்லர் எப்படி? – ‘கூஸ்பம்ப்ஸ்’ வசனங்கள், அனல் பறக்கும் ஆக்‌ஷன்! ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.‘

பராசக்தி’ படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவிக்கையில், ’20 வருட இசைப் பயணத்தில் ‘பராசக்தி’ எனது 100-வது படம். என் முதல் படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்தார். 50-வது படத்தில் விஜய் படத்துக்கு இசையமைத்தேன். 100-வது திரைப்படமாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளேன்.

முதல் படத்தில் பாடல் எழுதியிருந்தேன். தற்போது, 100-வது படத்திலும் பாடல் எழுதியுள்ளேன். இந்த 20 ஆண்டுகளில் 100 திரைப்படங்களுக்கு இசையமைத்ததற்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. ‘பராசக்தி’ படத்தின் முழு வீரியம் டிரெய்லர் வெளியாகும்போது தெரியும். அதில் நாங்கள் இன்னும் சில விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறோம். அது வெளியாகும்போது வெடிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

How is the trailer of 'Parasakthi'? - 'Goosebumps' dialogues, fiery action! G.V. Prakash Updates
How is the trailer of ‘Parasakthi’? – ‘Goosebumps’ dialogues, fiery action! G.V. Prakash Updates