தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பின்பு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் அவரது காதலன் தருண் என்பவர் உள்பட மேலும் சிலர் இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்கள்.

இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். அதில், துபாயில் இருந்து சட்டவிரோதமாக 127 கிலோ தங்கத்தை ரன்யா ராவ் கடத்தி வந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ரு.102 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் தனது மகள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரியும், அவரது கைது சட்டவிரோதமானது என்பதால், அதற்கு தடை விதிக்கும்படியும், ரன்யா ராவின் தாய் ரோகினி மற்றும் தருணின் தாய் ரமா ராஜு ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் (ஆட்கொணர்வு) மனுக்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் அனு சிவகுமார் மற்றும் விஜய்குமார் ஏ.பட்டீல் முன்னிலையில் நடைபெற்று வந்தது.

அப்போது ரன்யா ராவ் தரப்பில் ஆஜரான வக்கீல், ரன்யா ராவ் கைது விவகாரத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது மனுதாரர் வீடியோ எடுத்ததையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. எனவே மனுதாரர் மீது பதிவான வழக்கை ரத்து செய்வதுடன், அவரது கைதுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதுபோல், தருண் தாய் தரப்பில் ஆஜரான வக்கீலும் வாதிட்டார். பின்னர் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ரன்யா ராவுக்கு வீடியோ காட்சிகள் அடங்கிய பென் டிரைவை வழங்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் தங்கம் கடத்தியது ஆதாரத்துடன் நிரூபணமாகி இருப்பதால், வழக்கை ரத்து செய்யக் கூடாது. மேலும் அவர்கள் மீது ‘காபிபோசா’ சட்டம் அமலில் இருப்பதால், ஜாமீன் கிடைத்தாலும் அவர்களால் ஒரு ஆண்டுக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது. அதனால், இந்த ஆட்கொணர்வு மனுக்களை ரத்து செய்ய வேண்டும்’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரன்யா ராவ், தருண் ஆகியோரின் ஆட்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்

Gold smuggling case.. Actress Ranya gets one year in jail..! Bangalore court orders action..!
dinesh kumar

Recent Posts

“வரைபடத்தில்கூட இல்லாத இடத்தில் படப்பிடிப்பு!” – ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…

4 hours ago

“தவறான புரமோஷன்தான் ‘புலி’ படத்தின் தோல்விக்கு காரணம்!” – நட்டி ஓபன் டாக்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…

4 hours ago

கோலிவுட்டில் இசைப் போட்டி சூடுபிடிக்கிறது… அனிருத் Vs சாய் அபயங்கர்!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…

4 hours ago

கமல்ஹாசனின் AI எச்சரிக்கைக்கு ஸ்ருதி ஹாசனின் முழு ஆதரவு!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…

5 hours ago

சிக்மா மூலம் கோலிவுட்டில் மீண்டும் களமிறங்கும் ஷிவ் பண்டிட்!

2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…

5 hours ago

The Rise of GDN Lyric Video

The Rise of GDN Lyric Video | G.D.N | R. Madhavan | Varghese Moolan Pictures…

22 hours ago