Categories: Health

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் சாப்பிடும் உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது.

எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது
அவசியமாகிறது.

கீரைகள்: பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.
உலர் நட்ஸ்: பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

காய்கள்: வெண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

பழங்கள்: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

ப்ராக்கோலி: சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

முட்டை: முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

மீன்: பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது.
தயிர்: பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.

admin

Recent Posts

ஜேசன் சஞ்சய்-முதல்வர் விஜய் வைரல் வீடியோ: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு…

12 hours ago

பாடகி சின்மயி கணவர் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்!

பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ்…

12 hours ago

“சிக்மா” டப்பிங் BTS புகைப்படங்கள் வெளியீடு

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது…

12 hours ago

லோகேஷ் கனகராஜின் ‛டிசி, ஜூலை 31ல் ரிலீஸ்

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை…

13 hours ago

இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர் 2’ அப்டேட்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த…

15 hours ago

Kattazhagi Video Song

Kattazhagi Video Song | Idhayam Murali | Atharvaa | Thaman S | Kayadu Lohar |…

17 hours ago