‘டான் 3’ பட சர்ச்சை; ரன்வீர் சிங்கிற்கு எதிராக திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு

‘Don 3’ திரைப்படத்தில் இருந்து நடிகர் Ranveer Singh திடீரென விலகியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த நடவடிக்கைக்கு மேற்கிந்திய சினிமா ஊழியர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக 3 முறை Ranveer Singh-ஐ கூட்டமைப்பு அழைத்தும், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, ‘Don 3’ படத்தின் இயக்குநர் Farhan Akhtar, சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பில் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான ஓட்டல் மற்றும் வெளிநாட்டு பயண முன்பதிவுகள், முன் தயாரிப்பு பணிகள் உள்ளிட்ட செலவுகள் சேர்த்து ரூ.45 கோடி வரை செலவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘Don 3’ படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் Ranveer Singh முன்னிலையிலேயே நடைபெற்றதாகவும், படத்தின் விளம்பர காட்சிகளும் அவரை மையமாக வைத்து படமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் திடீரென படத்தில் இருந்து விலகியதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை விசாரித்த சினிமா கூட்டமைப்பு, Ranveer Singh-க்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தொழில்நுட்ப கலைஞர்கள், ஸ்பாட் பாய்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள உறுப்பினர்கள் இனி அவருடன் பணியாற்ற மாட்டார்கள் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

5000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும், 32 இணை கைவினை சங்கங்களும் உள்ள இந்த கூட்டமைப்பின் முடிவு, Ranveer Singh-இன் எதிர்கால திரைப்பட திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

Don’t Trouble the Trouble Teaser

Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti

18 hours ago

Train Official Teaser

Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu

18 hours ago

Anbe Diana Official Trailer

Anbe Diana Official Trailer | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath Sankar

19 hours ago

Oh Sukumari Teaser

Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju

19 hours ago

இதயம் முரளி திரை விமர்சனம்

பள்ளிப் பருவ காதல், கல்லூரி நினைவுகள், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. திருச்சியில்…

19 hours ago

லட்சுமி காந்தன் கொலை வழக்கு திரை விமர்சனம்

1970-களின் தமிழக கிராமப்புற பின்னணியில் நகரும் 'லட்சுமி காந்தன் கொலை வழக்கு', மரண தண்டனை, நீதி மற்றும் மனிதநேயம் குறித்து…

19 hours ago