Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“சொந்த ரசிகர்களே சூர்யாவின் பேனரை கொளுத்துறாங்களே”.. தீயாக பரவும் வீடியோ

fans firing actor suriya poster video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தற்போது சூர்யாவின் ரசிகர்கள் செய்த செயலின் வீடியோ அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது, சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் பேனரை நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சிலர் தீ வைத்து எரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த காரணம் தெரியாத நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.