தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா.
மலையாளத் திரை உலகில் முன்னணி நாயகியாக வலம் வந்த இவர் தமிழில் அஜித் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான டிஷர்ட் அணிந்து முரட்டுத்தனமாக கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
