வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் வேல்ஸ் நிறுவனத்துக்கு எப்போது தேதிகள் என்பதை சிம்பு தெரிவிக்க வேண்டும் அல்லது அஸ்வத் மாரிமுத்து படத்துக்கு முன்னதாக வேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையினை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று சிம்புவிடம் கூறப்பட்டுள்ளது.
இதனால், வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ‘அரசன்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. வருகிற 8-ந்தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க வேண்டும் என்று தொடங்கப்படுகிறது.

