தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து வருகிறார் வெற்றிமாறன் இயக்கம் எந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார்.
மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர், நெல்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இருந்தது.
இந்த நிலையில் வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளராக தானு இன்று இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
அதேபோல் இன்று டைட்டிலும் வெளியாகி இருக்கிறது அதாவது எஸ்டிஆர் 49 படத்திற்கு “அரசன்” என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.
ஆளப்பிறந்த அரசன்
வெற்றியுடன் சிலம்பரசன்#VetriMaaran @SilambarasanTR_#STR49 #SilambarasanTR #VCreations47 #ARASAN pic.twitter.com/zLk8chzGJl— Kalaippuli S Thanu (@theVcreations) October 7, 2025