Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தீபாவளிக்கு விக்ரம், பீஸ்ட் படங்கள் மோதல்..!! ஜெயிக்கப் போவது யார்

diwali special movies in tamil television update

தமிழ் சின்னத்திரையில் பண்டிகையை நாட்களை குறி வைத்து அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் புதுப்புது நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் களம் இறக்குவது வழக்கம். டிஆர்பி ரேட்டிங்கில் யாருடைய சேனல் முதல் இடத்தை பிடிக்க போகிறது என்ற போட்டி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாகவே இருந்து வரும்.

அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சன் டிவியில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை ஒளிபரப்ப உள்ளனர். இதற்குப் போட்டியாக விஜய் டிவியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி என பலரும் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற விக்ரம் படத்தை ஒளிபரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‌

இதனால் இந்த இரண்டு சேனல்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம். டிஆர்பி ரேட்டிங்கில் ஜெயிக்கப்போவது பீஸ்ட்டா? விக்ரமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

diwali special movies in tamil television update
diwali special movies in tamil television update