Tamilstar
Health

கருப்பட்டி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

disadvantages of karuppati

கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக கருப்பட்டியில் எண்ணற்ற ஊட்டசத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. கருப்பட்டி சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இதில் அதிகமான கலோரி இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது மட்டுமில்லாமல் நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சாப்பிடும் போது சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது மட்டுமில்லாமல் மேலும் செரிமான அமைப்பு பலவீனமாக இருப்பவர்கள் கருப்பட்டி சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் மற்றும் ஜீரணக் கோளாறு ஏற்படலாம்.

கருப்பட்டி உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.