ஹரி இயக்கத்தில் அடுத்து நடிக்கப்போகும் ஹீரோ யார் தெரியுமா? சூப்பர் ஹிட் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரி. அதிரடியான படங்களை இயக்குவதில் வல்லமை கொண்டவராக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென அந்தப் படம் கைவிடப்பட்டது.

இதனையடுத்து அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கியுள்ளார். மிக விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தை செவன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து ஹரி அடுத்ததாக ஜெயம் ரவி ஹீரோவாக வைத்து இதே தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி அகிலன் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இன்னொரு படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் மூன்றாவதாக ஹரி இயக்கும் படத்திலும் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

director-hari-in-next-hero-update
jothika lakshu

Recent Posts

எளிமை மாறாதவர்..! – கார்த்தி குறித்து நெகிழ்ந்த சர்தார் 2 நாயகி ஆஷிகா ரங்கநாத்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…

2 hours ago

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – ‘மண்டாடி’ படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…

2 hours ago

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ மனு!

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…

2 hours ago

சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…

4 hours ago

மண்டாடி திரை விமர்சனம்

ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…

4 hours ago

Higher Promo Song

Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…

5 hours ago