Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் 55: படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் அப்டேட்..!

director dhanush 55 movie shooting update

தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்க இருப்பதாகவும் 10 நாட்கள் இந்த படப்பிடிப்பு சென்னையில் நடந்து அதன் பிறகு திருப்பதிக்கு செல்லப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் மிகவும் புதிய பொழுது போக்கு படமாக இருக்கும் எனவும் மம்முட்டி இந்த படத்தில் படப்பிடிப்பின் பின்னர் இணைவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் தனுஷ் கடந்த வாரம் 3 ஆயிரம் ரசிகர்களை அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து புடவை மற்றும் பள்ளிப்பைகளை பரிசளித்துள்ளார் அடுத்த வாரம் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களையும் விரைவில் சந்திப்பார்.

தனுஷ் 55 படம் குறித்து வெளியான இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

director dhanush 55 movie shooting update
director dhanush 55 movie shooting update