Dhanush's visit to the Janyayan audio launch event? Or at the Parasakthi festival?
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை ? அப்போ பராசக்தி விழாவில் ?
மலேசியாவில், விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்பவர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஹெச்.வினோத்தின் அடுத்த பட ஹீரோ தனுஷ். எனவே தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்கின்றனர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. ஜனவரி முதல் வாரத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் என கூறப்படுகிறது.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் சிறப்பு விருந்தினராக வந்தால், பராசக்தி விழாவிற்கு யார் சிறப்பு விருந்தினராக வருவார்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பராசக்தி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகின்றது. படத்தை அவர்கள் தான் ப்ரோமோஷனும் செய்வார்கள்.
கமல்ஹாசன் ரெ ஜெயண்ட் நிறுவனத்துடன் நெருக்கமாக இருப்பதால், அவர் பராசக்தி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருவாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
கோலிவுட் வட்டாரத்தில் இவ்விரு படங்கள் தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதுவும் இது விஜய்யின் கடைசி படம் என்பதாலும், பராசக்தி திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறார்கள் என்பதாலும் இதை அரசியல் ரீதியாகவும் சிலர் பார்க்கின்றனர். பார்க்கலாம் பொங்கலை முன்னிட்டு, இவ்விரு படங்களின் வரவேற்பை.!
விஜய் பற்றிய கேள்வி, நடிகர் கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து! கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப்,…
'பராசக்தி' படத்தின் கதை இதுதானா? சமூக வலைதளத்தில் பரவும் தகவல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’…
‘ரெட்ட தல’ கதை சவாலாக இருந்தது: அருண் விஜய் மகிழ்ச்சி பாலா இயக்கத்தில் வெளியான 'வணங்கான்' படத்தில் சிறந்த நடிப்பை…
மக்களைத் தவறாக வழி நடத்துவதா? - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அழகுக்காக அறுவைச்…
'ஜெயிலர் 2' - சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’…
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ், பொதுமக்கள் எளிதில் சென்றடையக்கூடிய வசதியான இடத்தில் உள்ளது. புதிதாக…