Dhanush Next Movie Update
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.
கலர் எல்லோ புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு “தேரே இஸ்க் மேன்” (Tere Ishk Mein) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், “ராஞ்சனாவின் பத்து வருடங்கள், சில திரைப்படங்கள் நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றிவிடும். ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தற்போது ஒரு தசாப்தத்திற்கு பிறகு ராஞ்சனாவின் உலகில் இருந்து ஒரு கதை, “தேரே இஸ்க் மேன்” (Tere Ishk Mein). எதுமாதிரியான பயணம் எனக்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு சாகசமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் எங்களுக்கும் ” என்று பதிவிட்டுள்ளார். மேலும், “தேரே இஸ்க் மேன்” திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு ரோகினி பாம்புடன் வர விஜயா அலறி அடித்து ஓடியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…