dhanus again bollywood
நடிகர் தனுஷ் வரிசையாக அவர் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
அதன் பிறகு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷ் நடித்துவருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்தி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு முன் 2013-ல் வெளியான ராஞ்சன்னா என்ற படம் மூலம் தனுஷ் இந்தி திரையுலகிற்கு அறிமுகமானார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்து இருந்தார். இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார். அதன்பின்னர் அமிதாப்பச்சனுடன் இணைந்து ஷமிதாப் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான ‘அட்ரங்கி ரே’ படத்தின் மூலம் 3-வதாக மீண்டும் ஆனந்த் எல்.ராயுடன் இணைந்தார். இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
இந்நிலையில் மீண்டும் 2 புதிய இந்தி திரைப்படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் ஒரு படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கி தயாரிக்கிறார். மற்றொரு படத்தை பிரபல இந்தி பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் ‘த கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…