Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பையா 2 படத்தில் நடிக்கப் போகும் ஹீரோ ஹீரோயின் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

details-about-paiyaa-2-movie update

தமிழ் சினிமாவில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பையா. இந்த படத்தின் வெற்றியை கடந்து பல வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் இறுதியாக வெளியான வாரியர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதையடுத்து அவர் கமலுடன் இணைந்து பணியாற்ற போவதாக தகவல் பரவிய நிலையில் அதுவும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் அப்படியே இருக்கிறது.

இந்த நிலையில் லிங்கச்சாமி அடுத்து பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் எனவும் அந்த படத்தில் நாயகனாக ஆர்யா நடிக்க நாயகியாக தயாரிப்பாளர் போனி கபூர் மகள் ஜான்விகபூர் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல் பரவி வருகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் இது உறுதியானால் ஜான்விகபூர் அறிமுகமாகும் முதல் தமிழ் படமாக பையா 2 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

details-about-paiyaa-2-movie update
details-about-paiyaa-2-movie update