Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டிமான்டி காலனி 2 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா..? வைரலாகும் தகவல்

demonte-colony-2-movie-details

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதியின் நடிப்பில் வெளியான படம் தான் “டிமான்டி காலனி”. இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. தற்போது 7 ஆண்டுகளைக் கடந்திருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக படக்குழு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

தற்போது இப்படத்திற்கான கதையை எழுதிய அஜய் ஞானமுத்து தயாரிக்க அவரின் இணை இயக்குனர் வெங்கி வேணுகோபால் இப்படத்தை இயக்க உள்ளார். மேலும் டிமான்டி காலனி முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இந்த இரண்டாம் பாகத்தில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா பவானி சங்கரை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ப்ரியா பவானி சங்கர் மற்றும் அருள்நிதி “களத்தில் சந்திப்போம்” என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைய உள்ளனர். இது குறித்த அதிகாரிவபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 demonte-colony-2-movie-details

demonte-colony-2-movie-details