Categories: Health

உடலுக்கு தேவையான உடனடி எனர்ஜியை தரும் பேரீச்சை !

தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும்.

பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

பேரீச்சையில்இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது.

குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.

பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும். பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும். வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.

பேரீச்சையில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

 

admin

Recent Posts

இத்தாலியில் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் நயன்தாரா!

திரையுலகில் திருமணத்திற்குப் பிறகும், தாயான பிறகும் தனது நட்சத்திர அந்தஸ்தை அசைக்காமல் தக்கவைத்திருக்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் நயன்தாரா. குடும்ப…

2 hours ago

‘அரசன்’ படத்தில் 3 வேடங்களில் சிம்பு?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.…

2 hours ago

ஜூன் 5-ல் திரைக்கு வரும் ‘பரிமளா அண்ட் கோ’!

ஜெயராம் மற்றும் ஊர்வசி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமான ‘பரிமளா அண்ட் கோ’, வரும் ஜூன் 5-ஆம்…

2 hours ago

மீண்டும் இணையும் ‘கற்றது தமிழ்’ கூட்டணி?

இயக்குநர் ராம் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கல்ட் கிளாசிக்…

2 hours ago

‘இரட்டையர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘நாடோடிகள்’ புகழ் அபிநயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘இரட்டையர்’. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்த…

2 hours ago

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவனம் கவர்ந்த மிருணாள் தாக்கூர் – பூஜா ஹெக்டே!

இயக்குநர் டேவிட் தவான் இயக்கத்தில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹை ஜவானி தோ இஷ்க் ஹோனா…

23 hours ago