Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த வில்லன் விருதை வென்றவர்கள் யார் தெரியுமா? வைரலாகும் பதிவு

dadasaheb-phalke-award-for-animal-director-bobby-deol-wins-best-villain

2024 ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் நேற்றிரவு வழங்கப்பட்டன. இதில் சிறந்த இயக்குநருக்கான விருது, அனிமல் படத்தின் இயக்குநரான சந்தீப் ரெட்டி வாங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனை டீ சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும் அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோலுக்கு சிறந்த வில்லனுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த வருடம் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து பிரபாஸ் இயக்கத்தில், ஸ்பிரிட் எனும் திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க இருக்கிறார்.