தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வந்தவர் தேங்காய் ஸ்ரீனிவாசன். இவரது பேத்தியான ஸ்ருதிகா தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியைத் தழுவிய நிலையில் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. இந்த நிலையில் இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.
View this post on Instagram