Corona for the crew - Shah Rukh Khan in isolation
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நடிகர்கள் அமீர்கான், அக்ஷய்குமார், மாதவன், ரன்பீர் கபூர். கோவிந்தா, கார்த்திக் ஆர்யன், செந்தில், டைரக்டர் சுந்தர்.சி. நடிகைகள் நக்மா, நிவேதா தாமஸ், கவுரி கிஷான், ஐஸ்வர்யா லட்சுமி, பூமி பெட்னெகர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்கி உள்ளனர். சிலர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஷாருக்கான் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. பதான் என்ற இந்தி படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் நடந்தது. தற்போது மும்பையில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். பதான் படக்குழுவினருக்கு முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் ஷாருக்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் அபிரகாம் ஆகியோரும் நடிக்கின்றனர்.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…