Cook with Comali Shivangi Latest Viral Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் கலந்து கொண்ட சிவாங்கி தனது பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையாடித்தார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவாங்கி தனது நகைச்சுவையினால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது மட்டுமின்றி தனக்கென தனி இடத்தையும் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அஸ்வினுடன் இவர் செய்த நகைச்சுவை அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்றிருக்கும் சிவாங்கி இதற்கிடையே சில படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த சிவாங்கி இதனைத் தொடர்ந்து வடிவேலுக்கு மகளாக “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிவாங்கி அவ்வப்போது தனது instagram பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அந்த இன்ஸ்டாகிராமில் சிவாங்கியை 50 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் உடனடியாக வைரலாகிவிடுகிறது.
இந்நிலையில் எப்போதும் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளும் சிவாங்கி அழகாக பொம்மை போல் நடந்து வந்து அல்லு அர்ஜுனின் “புட்ட பொம்மா” என்ற பாடலுக்கு க்யூட்டாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் டான்ஸ் சூப்பராக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருவது மட்டுமின்றி அந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கியும் வருகின்றனர்.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…