வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தனர். இதில், சாய்குமாரின் நண்பர்கள் இருவர் உயிரைவிட, கச்சா எண்ணெய்யை திருடி விற்று அதில் வரும் பணத்தில் மீனவ மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்கிறார். இப்படி காலம் போக, ஒரு கட்டத்தில் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். சாய்குமாரின் வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா எண்ணெய்யை சரியான முறையில் பிரித்தெடுத்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து பெட்ரோல் மற்றும் டீசலாக கொண்டு வந்து பெட்ரோல் பங்குகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறார். இவர்களுக்கு போட்டியாக வரும் விவேக் பிரசன்னா, சாய் குமாரின் பெட்ரோல், டீசல் லாரிகளில் இருந்து பாதியை திருடி கலப்படமாக மாற்றுகிறார்.

இதற்கு போலீஸ் அதிகாரியான வினய் உதவுகிறார். தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் கலப்படமாக மாற்றுவதை ஹரிஷ் கல்யாண் கண்டுபிடிக்கிறார். இதுதொடர்பாக கேட்கும்போது, தனக்கும் குழாயில் இருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வேண்டும் என விவேக் பிரசன்னா கேட்கிறார். அப்போது, வினய்க்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் சண்டை வருகிறது. இதனால், ஹரிஷ் கல்யாண் தலைமறைவாகிறார். கச்சா எண்ணெயை எடுக்க வினயும், விவேக் பிரசன்னாவும் சதி திட்டங்களை தீட்டுகின்றனர். இதை அறியும் ஹரிஷ் கல்யாண் கடைசியில் என்ன செய்தார்? இருவரையும் எப்படி கையாண்டு, பெட்ரோல், டீசல் பிரச்சனையை தீர்த்தார் என்பது மீதிக்கதை.. நடிகர்கள் ஒரு மாஸ் ஆக்‌ஷன் திரைக்கதையின் ஹீரோக்கான அத்தனை முயற்சியையும் ஹரிஷ் கல்யாண் முடிந்தவரை செய்திருக்கிறார்.

படத்திற்கு அவரது பங்களிப்பு சிறப்பு. சாய்குமார் நல்ல நடிப்பை தந்துள்ளார். வினய் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். அதுல்யா தனது கதாப்பாத்திற்கேற்ப கச்சிதமாக நடித்துள்ளார். இயக்கம் மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சா எண்ணெய் அரசியல், மீன்பிடிபதில் பிரச்சனை என முக்கியமான கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி. ஒரே படத்தில் அனைத்து பிரச்சனையையும் காட்டியிருக்கிறார். முதல் பாதி வடசென்னை படத்தையும், 2ம் பாதி கத்தி படத்தையும் நினைவூட்டுகிறது.

படம் திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வும், ஆங்காங்கே வேகமும் எடுக்கிறது. ஆனால், ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் கண்கூடாக தெரிகிறது. இசை திபு நினன் தாமஸின் பாடல்கள், பின்னணி இசைக்கு வரவேற்பு.ஒளிப்பதிவு படத்தின் ஒளிப்பதிவு பாராட்டலாம். படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

diesel movie review
jothika lakshu

Recent Posts

Machakalli Lyrical Video

Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran

4 hours ago

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…

5 hours ago

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…

5 hours ago

ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

5 hours ago

டோரதி மனதில் ஆழமாகப் பதிந்தது.. படக்குழுவை பாராட்டிய மாரி செல்வராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…

5 hours ago

சிபிராஜ் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…

5 hours ago