அடுத்தடுத்து விருதுபெரும் சூர்யாவின் திரைப்படங்கள்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சமீபத்தில் 5 தேசிய விருதை பெற்றது. தற்போது மீண்டும் ஒரு புதிய விருதுக்கு சூர்யாவின் அடுத்த படமான “ஜெய் பீம்” திரைப்படம் தேர்வாகியுள்ளது.

அதாவது நடிகர் சூர்யாவின் நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இதில் முக்கிய கதாபாத்திரங்களாக லிஜோமோன் ஜோஸ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. சமீபத்தில் இப்படத்திற்காக 12வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்தன.

இதில் இப்படத்தில் நடித்த ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விழாவில் விருதுக்கு தேர்வாகியுள்ளது. அதன்படி 12 வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டியாண்டன் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக ஜெய் பீம் திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த தகவலால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

new award to actor suriya movie
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

2 days ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

2 days ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

2 days ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

2 days ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

2 days ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

2 days ago