Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகுடம் ஒரு சாதாரண படம் அல்ல.. தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட் !!

Climax shooting of Makudam which was successfully completed

மகுடம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மகுடம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தை இவரே இயக்கி நடித்து உள்ளார்.

இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை அறிக்கையாக வெளியிட்டு உள்ளது

அதாவது 17 நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் கடைபிடிப்புடன் இந்த படம் பிரம்மாண்டமாக நிறைவு பெற்றதாகவும், 17 நாட்கள் தொடர்ந்து மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை 12 மணி நேரம் நடைபெற்ற அதிரடியான கிளைமாக்ஸ் நிறைவுக்கு வந்துள்ளது.

மேலும் நடிகர் விஷால் இயக்குனராகம் முதல் முயற்சியான மகுடம் ஒரு சாதாரண படம் அல்ல படைப்பை நேசிக்கும் ஒருவரின் உள்ளம் கனிந்த பயணம் நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டையும் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய அனுபவத்தை அவர் உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு பொறுமை ஆர்வம் தளராத உறுதி ஆகியவற்றின் கலவையாக இருந்து இப்படத்தில் மையக்கருத்தான வீரமும் உணர்ச்சியும் இந்த படப்பிடிப்பில் முழுமையாக பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கூறியிருக்கும் இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்துள்ளது.