தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு அடுத்ததாக மிகப் பெரிய நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் மாற்ற மாட்டான் தேதி எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் பல மாதங்களுக்கு முன்னர் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் குறித்து பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் அவர்கள் யூட்யூபில் பேசியுள்ள வீடியோ திடீர் என வைரலாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில் சூர்யாவின் மார்க்கெட் சரிந்து விட்டது. சூர்யாவை காட்டிலும் சிவகார்த்திகேயன் தான் அதிக சம்பளம் வாங்குகிறார். அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது என வீடியோவில் கூறியுள்ளார்.
இதனால் சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


