chennai-comic-con-director-lokesh-kanagaraj-launched
சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற காமிக் கான் இந்தியா விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். \”எண்ட்வார்ஸ்: வால்யூம் 2 – டார்க் கான்குவெஸ்ட்\” (Endwars: Volume 2 – Dark Conquest) என்ற ஆங்கிலப் புத்தகம், \”எண்ட்வார்ஸ்: தி சூசன் ஒன்\” (Endwars: The Chosen One – Volume 1) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம் \”இறுதிப்போர்- மண்ணவன் ஒருவன்\” ஆகும். இதில் \”இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்\” புத்தகத்தை மதன் கார்கி மொழிமாற்றம் செய்துள்ளார்.
சென்னை காமிக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் ஏராளமான காமிக் வாசகர்கள் கலந்து கொண்டனர். கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என நிரம்பியிருந்த அந்த இடம் காமிக் புத்தக ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. சித்திரக்கதைகளின் வசீகரிக்கும் உலகத்தைக் கொண்டாடும் படைப்பாளிகள் மற்றும் ஆர்வமுள்ள வாசகர்களின் சந்திப்பாக இது அமைந்தது. இந்த விழாவில் பங்கேற்று இந்த 2 புத்தகங்களையும் வாங்கிய வாசகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கையெழுத்திட்ட பிரதிகளை வழங்கினார்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…