chandramukhi-2-audio-launch-update
கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி இயக்குனராக திகழ்பவர் பி.வாசு. இவரது இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு அவர்கள் இயக்கியுள்ளார். இதில் வேட்டையன் ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடிக்க நடிகை கங்கனா ராணாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மனோபாலா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
இந்நிலையில், ‘சந்திரமுகி- 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை 25ஆம் தேதியானா நாளை நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…