ரோகினிக்கு வந்த ஃபோன் கால். சந்தேகத்தில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகிணியின் அம்மா ரோட்டில் நடந்து வந்து திடீரென மயக்கம் வந்து கீழே சரிய அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து தேற்றுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அவர் ரோகினிக்கு போன் செய்ய விஜயா ஃபோனை எடுக்க கல்யாணி எப்படி இருக்க இப்ப உன்கிட்ட பேசலாமா என்று இவர் கேட்க விஜயா கல்யாணியா யார் நீங்க என்று கேள்வி கேட்க சுதாரித்துக் கொள்ளும் லட்சுமி தப்பான நம்பருக்கு போன் பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க என சமாளித்து போனை வைக்கிறார். இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று விஜயாவுக்கு சந்தேகம் வருகிறது.

அதைத்தொடர்ந்து ரோகிணி துணிகளை துவைக்க எடுத்து வர விஜயா நீ எல்லாம் அதை அப்படி போட்டுட்டு வா அந்த மீனா துவைப்பா நீ எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்கிறாய் என்று சொல்ல பிறகு மீனா அவரது துணிகளை எடுக்க வர ஒரு குச்சியை வைத்து மனோஜின் ஜட்டியை எடுத்து போட விஜயா அது எதுக்கு போடுற என்று கேட்க அது அவரோடது கிடையாது என்று சொல்ல அவன் 100 ரூபாய்க்கு நான்கு வாங்குறவன் அது காஸ்லி ஜெட்டி மனோஜ் யூஸ் பண்றது, எல்லாத்தையும் எடுத்துட்டு போய் துவை என்று சொல்கிறார்.

என் புருஷனோடது மட்டும் தான் என்னால துவைக்க முடியும் என்று சொல்ல விஜயா மீனாவை திட்டி மொத்த துணிகளையும் துவைக்க வைக்கிறார். மறுபக்கம் முத்து தன்னுடைய டிரைவர் நண்பர்களை கூப்பிட்டு வைத்து குழந்தை எப்ப பிறக்கும் என்று கேட்டு கன்பூஸ் ஆகிறார்.

அடுத்து அண்ணாமலை கோர்ட் கேஸ் ஞாபகம் வந்து முத்து வேகமாக காரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். கோர்ட்டில் அண்ணாமலை மற்றும் உயர் அதிகாரி என இருவரையும் உட்கார வைத்து நீதிபதி விசாரணை செய்ய அண்ணாமலை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி தன்னுடைய பென்ஷன் பணத்தை நீங்கள் தான் வாங்கி தரணும் என கோரிக்கை வைக்கிறார்.

ஒவ்வொரு முறையும் ஸ்ருதியின் அப்பா குறுக்க பேசி பல்பு வாங்குகிறார். பிறகு அங்கு வரும் முத்து இவரைப் பார்த்து நீயும் இங்கதான் இருக்கியா என் அப்பாவோட பென்ஷன் பணத்தை தராமல் வைத்திருக்க நீ யாரு என்று கோபப்பட நீதிபதி இவர் யார் என்று கேட்க இவன் தான் என்னுடைய சின்ன பையன் முத்து, இவன் தான் அவர் மேல கை வச்சுட்டான் என்று அண்ணாமலை சொல்ல நான் வேணும்னு கை வைக்கவில்லை ஐயா.. இவர் என் அப்பாவை பத்தி தப்பா பேசினாரு அதனாலதான் கை வச்சேன் நீங்க உங்க அப்பாவ பத்தி தப்பா பேசினா சும்மா இருப்பீகளா என்று கேள்வி கேட்கிறார்.

உயர் அதிகாரி அண்ணாமலை மீது குற்றம் சாட்ட எதை எதையோ காரணம் சொல்ல நீதிபதி நீங்க சொந்த பகை காரணமாகத்தான் பணத்தை நிறுத்தி வச்சிருக்கீங்க, அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது என்று சத்தம் போட்டு அவருக்கு சேர வேண்டிய பென்ஷன் பணம் மொத்தத்தையும் செட்டில் செய்ய வேண்டும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக உங்க சொந்த பணத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் என உத்தரவு போடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

19 hours ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

19 hours ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

19 hours ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

2 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

2 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

2 days ago