Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவகாரமான கேள்வி கேட்ட ரசிகர்.நச்சுனு பதில் கொடுத்த செலினா ஜெட்லி.

bollywood actress celina jaitly reply for fan question

இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் செலினா ஜெட்லி. இவர் பல பாலிவுட் திரைப்படங்களில், ஒரு சில தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை செலினா கடந்த 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டின் தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு இரட்டை குழந்தை உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தனது கணவருடன் ஆஸ்திரியாவில் உள்ள செலினா ஜெட்லி, சமீபத்தில் சமூக வலைதளங்களில் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், ‘எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் எனது உடல்நிலை தேறுவதற்கு முன் என்னை திருமணம் செய்து கொண்டு என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த செலீனா, ‘நான் என் கணவர் மற்றும் 3 குழந்தைகளிடம் கேட்டு பதில் சொல்கிறேன்’ என நக்கலாக பதில் அளித்துள்ளார். நடிகையின் இந்த பதிலை பதிலுக்கு பல நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

bollywood actress celina jaitly reply for fan question
bollywood actress celina jaitly reply for fan question