Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

biggboss tamil9 day 15 promo 1

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யாராக இருக்கும் என்று விஜய் சேதுபதி கேட்க போட்டியாளர்கள் கம்ருதீன் அப்சரா என்று மாற்றி மாற்றி சொல்ல இந்த வார வெளியில் போறவங்க அவங்க குடும்பத்தோட தீபாவளியை கொண்டாடலாம் என்று சொல்லிவிட்டு எலிமினேஷன் கார்டு காட்டுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.