தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் இல் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில் இன்றைய தினத்தில் போட்டியாளர்களின் வாக்குப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் அளிக்கப்படுகிறது. அதன்படி வனிதாவுக்கு நாட்டாமை பட்டம் அளிக்க அவர் உங்க பேர காப்பாத்திட்ட டாடி என கூறுகிறார்.
அதன்பிறகு தாமரைச்செல்விக்கு உலக மகா நடிப்புடா சாமி என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கண் கலங்கி ஏன் இரண்டு குழந்தைகள் மேல சத்தியமா நான் இந்த வீட்ல நடிக்கல. என் வீட்ல எப்படி இருப்பேனோ அப்படித்தான் இருக்கிறேன். நான் அக்கா தங்கச்சி சகோதரன் என்று தான் உங்களிடம் பழகினேன் என கண்ணீர் விட்டு அழுதார்.
இந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் பலரையும் எமோஷனலாக்கி வருகிறது.
#BBUltimate இல்லத்தில் இன்று.. #Day6 #Promo1 #NowStreaming only on #disneyplushotstar.. pic.twitter.com/ztuYkfsjeG
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 5, 2022