தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி இரண்டு வாரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரடியாக ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது வாரத்தில் வெளியேறப் போவது யார் என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
பாலாஜி முருகதாஸ், தாமரைச்செல்வி, ஜூலி, அபிநய், சுஜா வருணி மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதுவரை பதிவாகியுள்ள ஓட்டுகளின் படி சுஜா வருணி மிகவும் குறைவான ஓட்டுகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக அபினய் உள்ளார். மேலும் குறைந்த ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் தாடி பாலாஜி இருக்கிறார்.
ஆகவே இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுஜா வருணி அல்லது அபிநய் வெளியேறவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
