Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் நடக்கல குழந்தையா.?? விளக்கம் கொடுத்த நடிகை ஓவியா

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வந்தவர் ஓவியா.

அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இப்படியான நிலையின் இவர் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த போது உங்களுக்கு ஒரு மகன் இருக்கானாமே, துபாய் ஸ்கூல்ல படிக்கிறானாமே என கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு பதிலளித்துள்ள ஓவியா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல, ஆனா ஒரு குழந்தை இருக்கு அது என்னுடைய செல்ல நாய்க்குட்டி தான் என தெரிவித்துள்ளார். அது என் கூட தான் படுத்து தூங்கும் அதுக்கு நான் தான் சாப்பாடு ஊட்டி விடுவேன் என கூறியுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமும் அதற்கான தைரியமும் இல்லை. அது நடக்குமா என்பதே டவுட்டு தான் என தெரிவித்துள்ளார்.

bigg boss actress oviya exclusive news update
bigg boss actress oviya exclusive news update