Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் கமலை சீண்டிய தாடி பாலாஜி மனைவி நித்யா பரபரப்பு பேட்டி

Big Boss Nithya About KamalHaasan

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் விஜய் டிவியில் நடுவராகவும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வரும் தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவுடன் பங்கேற்றார். இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை சென்று கொண்டிருந்ததால் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை இருவரையும் பங்கேற்க வைத்தது.

அதற்கான முயற்சிகள் நடந்த நிலையில் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்று சேர்வது போல காட்டப்பட்டது. ஆனால் நிஜத்தில் தற்போது வரை இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி வருகின்றனர்.

மேலும் நித்யா ஒரு பேட்டியில் கமல் மிகவும் மோசமானவர் அவரை மாதிரி மோசமான கேரக்டரை என்னுடைய வாழ்க்கையில் பார்த்ததே கிடையாது என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் மீண்டும் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் கமல் மது பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். இதில் தாடி பாலாஜி எனக்கே தெரியாமல் கலந்து கொண்டார். கமல் சார் முன்னாடி நல்லவர் போல நாடகமாடினார். அவரிடம் என்னுடைய தரப்பு நியாயத்தை பேச முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை.

அவருடைய மக்கள் நீதி மையம் கட்சிக்காக நான் நிறைய உழைத்திருக்கிறார். கட்சியில் இருக்கும் ஒரு பெண்ணின் பிரச்சனையை சரிசெய்ய முடியாத அவர் மக்களுக்கு எப்படி நல்லது செய்யப் போகிறார்? மக்கள் நீதி மையம் என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் அங்கே எந்த நீதியும் கிடைக்காது என வெளுத்து வாங்கியுள்ளார். கமல் குறித்து நித்யாவின் இந்த அடுக்கடுக்கான பேச்சுகள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மேலும் தாடி பாலாஜி இவ்வாறு நடந்து கொள்வதெல்லாம் வெறும் மீடியாவுக்கு தான் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Big Boss Nithya About KamalHaasan
Big Boss Nithya About KamalHaasan