bharathi kannamma serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஹேமா பாரதி வீட்டுக்கு சென்று ஸ்வீட் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் சொன்ன நிலையில் என்கூட சேர்த்து தீபாவளி கொண்டாடுவியா என பாரதி கேட்க கொண்டாடுவேன். ஆனால் ஒரு கண்டிஷன் இப்படி அழுக்கு டிரஸ்ல இருந்தா கொண்டாட மாட்டேன் என சொல்ல பாரதி 5 மினிட்ஸ் என சொல்லி குளித்து டிரஸ் மாத்தி வருகிறார்.
பிறகு ஹேமா பாரதி அகிலன் என மூவரும் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட அதன் பிறகு ஹேமா வீட்டுக்கு கிளம்பறேன் என சொல்லி கண்ணம்மா வீட்டுக்கு வந்து விடுகிறாள். சௌந்தர்யா பாரதியிடம் கண்ணம்மா தான் ஹேமாவை சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக சொல்ல பாரதி நன்றி கூறுகிறார்.
பிறகு மறுநாள் ஸ்கூலில் ஹேமாவை அவரது மிஸ் அழைத்து இப்போ உங்க டாடி பாரதி எங்க இருப்பாரு வீட்டுலயா ஹாஸ்பிடல்லயா என கேட்கிறார். ஹேமா தெரியாது என சொல்ல பிறகு உன்ன பத்தி கம்ப்ளைன்ட் பண்ண கேட்கல, நம்ம ஸ்கூல்ல நடக்கிற ஃபங்ஷனுக்கு அவரை சீப் கெஸ்ட்டா கூப்பிடனும் என கூறுகிறார். பின்னர் ஹேமா அவரது போன் நம்பர் சொல்கிறார். நீயும் வீட்டுக்கு போய் உங்க டாடிய கண்டிப்பா வரணும்னு சொல்லு என சொல்ல நான் அவர்கிட்ட பேசறது இல்ல நான் அவர் வீட்டிலேயே இல்ல அவர் என்னோட அப்பா கிடையாது. லட்சுமி தான் என்னோட அக்கா, அவங்க அம்மா கண்ணம்மா தான் என்னுடைய அம்மா இதுதான் உண்மை. எனக்கே இப்போ தான் தெரிந்தது என கூறுகிறார்.
பாரதி உங்க அப்பா இல்லனா உன்னுடைய அப்பா யார் என மிஸ் கேட்க தெரியல அத பத்தி நான் இன்னும் எங்க அம்மா கிட்ட கேட்கல என கூறுகிறார். பிறகு ஹேமா லட்சுமியை கூப்பிட்டு எனக்கு அம்மா கண்ணம்மா அம்மா என்று தெரியும். அப்பா யாரு என கேட்க லட்சுமி கண்ணமா சொன்னதை யோசித்துப் பார்த்து எனக்கு தெரியாது அம்மா என்கிட்ட சொன்னதில்ல, நான் இதைப் பத்தி கேட்டாலும் அவங்க சொல்றது கிடையாது என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…
சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள்…
Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…