Baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் இனியா கோபியுடன் போன வருத்தத்தில் பாக்யா உட்பட எல்லோரும் அப்படியே அமர்ந்து கொண்டிருக்க எழில் நான் போய் இனியாவை கூட்டிட்டு வரேன் என கிளம்ப தாத்தா தடுத்து நிறுத்துகிறார். அவளாவே வருவா என கூறுகிறார். செல்வி நானாவது பொய் கூட்டிட்டு வரேன்னு சொல்ல ஈஸ்வரி அவளையும் வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார்.
இந்தப் பக்கம் இனியா கோபி மற்றும் மயூரா என மூவரும் கேரம் போர்டு விளையாட ராதிகா இனியாவுக்காக புது துணிகளை வாங்கி வந்து கொடுக்க கோபி ராதிகாவுக்கு நன்றி சொல்லி பாராட்டுகிறார். பிறகு ஹோட்டலில் இருந்து சப்பாத்தி ஆர்டர் செய்து இனியாவுக்கு கொடுக்கிறார்.
அதன்பிறகு இனியா தூக்கம் வருது என சொல்ல கோபி ராதிகாவிடம் சென்று இப்போ நாம நாலு பேர் இருப்போம் எங்க தூங்குறது என கேட்க ராதிகா சின்ன வீடா பார்த்துட்டு எங்க தூங்குறதுன்னு கேட்டா என்ன சொல்றது என சொல்லி இனியா மயூவுடன் கட்டலில் படுத்துக்கட்டும். நாம ரெண்டு பேரும் ஹாலில் பாய் போட்டு படுத்துக்கலாம் என சொல்ல கோபிக்கு ஒரு ஆனந்தம் இன்னைக்கு தான் நாம ரெண்டு பேரும் தனியா இருக்க போறோம் என சந்தோஷப்படுகிறார்.
இனியாவை அழைத்துக் கொண்டு ரூமில் படுக்க வைத்து விட்டு இவர்கள் இருவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கோபி ராதிகா என நெருங்கி வர இனியா வெளியே எழுந்து வந்து உங்க கூட வேணா தூங்குறேன் டாடி என பக்கத்தில் உட்கார ராதிகா மயூ தனியாய் இருப்ப நான் உள்ள போறேன் என எழுந்து சென்று விடுகிறார். இதனால் கோபி மற்றும் இனியா ஹாலில் படுத்து தூங்குகின்றனர்.
இந்த பக்கம் எல்லோரும் வருத்தமாக அமர்ந்து கொண்டிருக்க பிறகு எழில் எல்லோரையும் சமாதானம் செய்து தூங்க அனுப்பி வைக்கிறார். பாக்கியா இனியாவின் போட்டோவை பார்த்து கண்கலங்குகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் இனியா செஞ்சது தப்புன்னு அவளுக்கு புரிய வைத்து அவளை வரவிருக்கும் நான் அங்கதான் இருக்கப் போறேன் என பேக்குடன் ராதிகா வீட்டுக்கு கிளம்பி செல்கிறார் தாத்தா.
Modha Rathri Official Trailer | Rishikanth | Raja Karuppasamy | Anishma Anilkumar | Bharath Sankar
Ayyayo Ammaadi Lyrical Video | Sigma | Sundeep | Faria | Yuvan | Thaman S…
Irumudi Official Tamil Trailer | Ravi Teja | Priya Bhavani Shankar | Shiva Nirvana |…
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…