கண்ணமாவை பாராட்டிய பாரதி..மகிழ்ச்சியில் சௌந்தர்யா குடும்பத்தினர்..இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சக்திக்கு ஆபரேஷன் உள்ளே நடந்து கொண்டிருக்க அவர் பூரண குணம் பெற்று திரும்பி வரவேண்டும் என பல்வேறு இடங்களில் பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. கண்ணம்மா நல்லபடியாக ஆபரேஷன் நடந்து முடிந்து கடவுளையும் டாக்டர்களையும் நம்புங்க என சக்தியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். ‌‌

இந்த நேரத்தில் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து நர்ஸ் வெளியே வர அவரிடம் ஆபரேஷன் குறித்து கேட்க கொஞ்சம் கிரிட்டிக்கலாக தான் இருக்கிறது என சொல்ல அனைவரும் பதட்டம் அடை கின்றனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி பாரதி வெற்றிகரமாக இந்த ஆபரேஷனை முடிக்கிறார். பிறகு வெளியே வந்த அவர் சக்தியின் பெற்றோரிடம் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது இனிமே சக்தி எல்லோரைப் போலவும் சந்தோஷமாக இருக்கலாம் என கூறுகிறார்.

பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்த விஷயத்தை கூறுகிறார். டாக்டர்களில் அசோசியேஷன் தலைவர் பேசுகையில் பாரதியை ஓவராக புகழ்ந்து பேசுகிறார். பாரதி ஒரு ஆளாக இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் இது மிகப்பெரிய சாதனை என பாராட்டுகிறார். பிறகு இந்த ஆபரேஷனுக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்ட விக்ரம் மருத்துவமனைக்கு பாராட்டு தெரிவிக்கிறார்.

இதைக்கேட்டு எல்லோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். சௌந்தர்யா, வெண்பா ஷர்மிளா என அனைவரும் சந்தோஷ படுகின்றனர். பிறகு பத்திரிக்கையாளர்கள் டாக்டர் அசோசியேஷன் தலைவர் சொன்னதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்க இது என்னுடைய தனிப்பட்ட முயற்சி அல்ல இது ஒரு கூட்டு முயற்சி இதில் பங்குகொண்ட எல்லோருக்கும் இந்த வெற்றியில் பங்கு உள்ளது என கூறுகிறார்.

குறிப்பாக இவை அத்தனையும் சிறப்பாக நடந்து முடியவும் எனக்கு பிரஷர் இல்லாமல் பார்த்துக் கொள்வதற்கும் மிக முக்கிய காரணம் விக்ரம் மருத்துவமனையில் அட்மின் ஆபீசர் கண்ணமா தான் என கூறுகிறார். பிறகு பத்திரிகையாளர்கள் எல்லோரும் கண்ணம்மா யார் என கேட்க கண்ணம்மாவை கை காட்டுகிறார் பாரதி. பாரதி கண்ணம்மாவை புகழ்ந்து பேசியதை பார்த்து வெண்பா அதிர்ச்சி அடைகிறார். ஷர்மிலா கண்ணம்மாவை பாராட்டுகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 17.05.22
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

17 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

17 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

17 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

17 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

18 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

2 days ago