மனம் மாறிய கண்ணம்மா. மகிழ்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மா பாரதியுடன் புகைப்படங்களை பார்த்து அழுது கொண்டிருக்க அங்கு வந்த தாமரை கண்ணம்மாவுக்கு அறிவுரை கூற முடிவெடுக்க தெரியல என அழுகிறார்.

அதன் பிறகு தாமரை நான் ஒரு வழி சொல்றேன் கண்ண மூடி ஒரு நிமிஷம் கோபமான பாரதிய நினைச்சுக்கோ, இன்னொரு பக்கம் குழந்தைகளோட அவரோட சந்தோஷமா வாழற மாதிரி நினைச்சுக்க கடைசில எது உன் கண்ணு முன்னாடி வந்து நிற்கிறதோ அதுதான் உன்னுடைய ஆசை அதையே முடிவாய் எடு என்று சொல்லி கண்ணை மூட சொல்ல கண்ணம்மாவிற்கு குழந்தைகளுடன் பாரதியோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

அதன் பிறகு கண்ணம்மா பாரதியை தேடி செல்ல அதற்குள் அகிலனின் கார் ரிப்பேர் ஆகி நிற்கிறது. பிறகு காரை சரி செய்து கொண்டு அனைவரும் கிளம்ப கண்ணம்மா ஓடி வருகிறார். இருந்தாலும் கார் கிளம்பி கொஞ்ச தூரம் போனதும் பாரதி காரை நிறுத்தி கண்ணம்மா கூப்பிடுவது போலவே இருப்பதாக சொல்லி காரை விட்டு இறங்கி தேடுகிறார்.

பிறகு பாரதியும் கண்ணம்மாவும் சந்தித்துக் கொள்ள கண்ணம்மா நமக்குள் நடந்த பிரச்சனைகள் கசப்பான சம்பவங்கள் எல்லாத்தையும் மறந்து விட்டதாக சொல்கிறார். நானும் தோற்கல நீங்களும் தோற்கல நம்முடைய காதலும் அன்பும் ஜெயித்து விட்டதாக சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

மேலும் கண்ணம்மா என்னை ஏத்துக்குவீங்களா என கேட்க பாரதி கட்டிப்பிடித்து ஆசையை வெளிப்படுத்துகிறார். பிறகு சௌந்தர்யா இருவரையும் வாழ்த்த பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


bharathi kannamma serial episode update
jothika lakshu

Recent Posts

காலில் விழுந்து கெஞ்சிய முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…

2 hours ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த டாக்டர்,அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…

2 hours ago

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..!

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

20 hours ago

கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது…

20 hours ago

மதராசி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மதராசி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

23 hours ago

காந்தி கண்ணாடி : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

காந்தி கண்ணாடி படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

24 hours ago