Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹாஸ்பிடலுக்கு வந்த சௌந்தர்யா குடும்பம். கடைசியில் காத்திருந்த ஷாக். இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதியை பார்க்க சௌந்தர்யாவின் குடும்பம் ஹாஸ்பிடலுக்கு வந்த நிலையில் டாக்டர் தலையின் பின் பக்கத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது அதிகமாக ரத்தம் போய் இருக்கு, மூளைக்குப் போகும் நரம்பில் பிளாக் இருக்கு என சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

பிறகு அகிலன் கணேசனிடம் கண்ணம்மா அண்ணி வரலையா என கேட்க பாரதி அடிபட்டு ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்த போது கண்ணம்மா அங்க தான் பாத்துட்டு இருந்தா ஆனா அவளும் வரல நானும் கூப்பிடல என சொல்கிறார். இந்த பக்கம் கண்ணம்மா வீட்டில் தூக்கம் வராமல் பாரதியை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மறுநாள் காலையில் ஹேமா ஏதோ ஒரு யோசனையில் மரத்தடியில் உட்கார்ந்து இருக்க அங்கு வரும் பூஜா எங்கப்பா வெளிநாட்டுல இல்ல நான் சின்ன வயசா இருக்கும்போதே இறந்துட்டாரு. எனக்கு என் அப்பாவோட பாசம் கிடைக்கல, ஆனா உனக்கு அப்பா இருந்தும் அவர் உன்கிட்ட நெருங்கி வரும் போது நீ தள்ளி தள்ளி போற என ஹேமாவிடம் சொல்கிறார். பிறகு லட்சுமி இதுக்கு மேலயும் அப்பாவோட பாசத்தை பத்தி உனக்கு எடுத்து சொல்ல முடியாது, இதுக்கு மேலயும் நீ கோவமா இருந்தா இருந்துக்கோ என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

பிறகு லஷ்மி கண்ணம்மாவிடம் சென்று எனக்கு அப்பாவை பாக்கணும் போல இருக்கு தயவு செஞ்சு என்னை கூட்டிட்டு போ நீ கூட்டிட்டு போனாலும் தாத்தாவையோ இல்ல பெரியம்மாவையோ கூட்டிட்டு போக சொல்லு என கூறுகிறார். பிறகு ஹேமாவும் வந்து எனக்கும் டாடியை பாக்கணும் போல இருக்கு, என்ன அவர் ரொம்ப நல்லா பாத்துகிட்டார் இப்ப அவர் ஹாஸ்பிடல்ல இருக்காருன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, தயவுசெஞ்சு டாடியை பார்க்க கூட்டிட்டு போங்க என சொல்ல கண்ணம்மா சரி போலாம் என கூறுகிறார்.

பிறகு தாமரை நானும் வருகிறேன் என சொல்ல நான்கு பேரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். அப்போது கோவிலில் பூஜை நடக்க கோவிலுக்கு போயிட்டு போகலாம் என சொல்ல எல்லோரும் கோவில் சென்று பாரதி பெயரில் அர்ச்சனை செய்து ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update