bharathi-kannamma serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாரதி ஒரு நாள் முழுவதும் தன்னை நினைக்காமல் இருக்க வேண்டும் என கண்ணம்மாவுக்கு சவால் விட்ட நிலையில் கண்ணம்மாவுக்கு காலையில் எழுந்ததிலிருந்து அடிக்கடி பாரதி ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது.
அடுத்து பாரதி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது பாண்டி அங்கு வந்து இளநீர் கடைக்காரரிடம் கந்துவட்டி கேட்டு தகராறு செய்ய பாரதி இது ரொம்ப தப்பு என பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. பாண்டி இப்படி தேவையில்லாம பேசிகிட்டு இருந்தா நடக்கிறது வேற என அருவாளை தூக்கி காட்ட பாரதி பதிலுக்கு சவால் விடுகிறார்.
அடுத்து மாலை நேரமானதும் பாரதி கண்ணம்மாவை வழிமறித்து பேச முயற்சி செய்ய கண்ணம்மா விலகிச் செல்ல பிறகு நீ இன்னைக்கு முழுக்க என்ன நினைச்சிருக்க என சொல்ல நீங்க விட்டது ஒரு சவாலு இதுல நான் தோத்துட்டேன் வேற வந்து பேசுறீங்க என கண்ணம்மா கோபப்பட பாரதி அப்போ இன்னைக்கு நீ உண்மையாவே என்னை நினைத்து இருக்க. நான் உன்னையும் குழந்தைகளையும் கூட்டிட்டு தான் இந்த ஊரை விட்டு போவேன் என உறுதியாக கூறுகிறார்.
அதன் பிறகு கண்ணம்மா அப்பாவிடம் ஒரு புது வண்டி புக் பண்ணி இருப்பதாக கூறுகிறார். மறுநாள் காலையில் புது வண்டிக்கு பூஜை போட பாரதி அதை பார்த்து கண்ணம்மாவிற்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுப்பது போல நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.
நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு தமிழில், மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில…
துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி…
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…